செவ்வாய், 4 செப்டம்பர், 2012

துருக்கியில் பயங்கர மோதல்: ராணுவ வீரர்கள் உள்பட 29 பேர் பலி

துருக்கியில் ராணுவ வளாகம் மீது குர்திஷ்  போரலிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற மோதலில் 29 பேர் உயிரிழந்தனர்.

துருக்கியின் வடகிழக்குப் பகுதியில் குர்த் இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய குர்திஸ்தான் மக்கள் கட்சி, தங்களுக்குத் தனிநாடு கேட்டுப் போராட்டங்களை நடத்தியது.

இக்கட்சி, கடந்த 1984-ல் ஆயுதம் தாங்கிய போரலிகள் அமைப்பாக உருவெடுத்தது. அதன் பின், நடைபெற்ற வெவ்வேறு தாக்குதல்கள் மற்றும் மோதல்களில் இதுவரை 45 ஆயிரம் பேர் இறந்து விட்டனர்.

இந்த அமைப்பு, துருக்கியின் வடகிழக்கு நகரான காசியான்டேப்பில் கடந்த மாதம் நடத்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், சிர்னாக் மாகாணத்தில் உள்ள பேதுசேபாக் நகரில் உள்ள ராணுவ வளாகம் மீது குர்திஷ் போரலிகள் அமைப்பு இயந்திரத் துப்பாக்கிகளா மற்றும் ராக்கெட் லாஞ்சர்களைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவில் கடும் தாக்குதல் நடத்தியது. ராணுவம் அதற்குப் பதிலடி கொடுத்தது.

இந்த மோதலில் 9 ராணுவ வீரர்களும், 20 போரலிகளும் கொல்லப்பட்டதாக சிர்னாக் மாகாண ஆளுநர் வாடேட்டின் ஓஸ்கான் தெரிவித்தார். இதனிடையே, குர்திஷ் போரலிகளுக்கு சிரியா அரசு உதவுவதாக துருக்கி அரசு சந்தேகிக்கிறது. ஏனெனில், சிரியா அதிபர் பஸôர் அல்-அஸôத்துக்கு எதிராகப் போராடும் பயங்கரவாதிகளுக்கு துருக்கி அரசு உதவி செய்வதற்குப் பதிலடியாக சிரியா இவ்வாறு செய்வதாக சந்தேகிக்கப்படுகிறது.