செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இலங்கை ராணுவ வீரர்களது பயிற்சியை கண்டித்து மீண்டும் முற்றுகை: 43 பேர் கைது

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 43 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலி‌தா, கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையிலும், இலங்கையை சேர்ந்த 2 வீரர்களுக்கு வெலிங்டன் இராணுவ மையத்தில் மத்திய அரசு தொடர்ந்து பயிற்சியை அளித்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயிற்சி மையத்தை முற்றுகையிட முயன்றவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

(தினமலர்)