ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையைச் சேர்ந்த அதிகரிகள் எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு அவர்கள் இலங்கை வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி இவர்கள் இலங்கை வரக்கூடும் என வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவனீதம் பிள்ளையின் ஆலோசனையின் படி அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு வருவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டதன் படி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையைச் சேர்ந்த அதிகரிகள் இலங்கை வருகின்றனர்.
இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில், மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.