5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இடம்பெற்ற தினத்தன்று வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து தகவல் அறிந்தவர்களின் உதவியை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர். இதன்படி, தகவல் அறிந்தோர் 011-2320141 begin_of_the_skype_highlighting GRATUIT 011-2320141 end_of_the_skype_highlighting, 011-2320142 begin_of_the_skype_highlighting GRATUIT 011-2320142 end_of_the_skype_highlighting, 011-2320143 begin_of_the_skype_highlighting GRATUIT 011-2320143 end_of_the_skype_highlighting போன்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்க முடிவதோடு 011-2326937 begin_of_the_skype_highlighting GRATUIT 011-2326937 end_of_the_skype_highlighting என்ற இலக்கத்திற்கு தொலைநகல் செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக குற்றம் சுமத்திய இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் மஹிந்த ஜயசிங்கவை கடந்த 2012-08-28, 29, 30, 31 மற்றும் 04 திகதிகளில் வாக்குமூலம் அளிக்க வருமாறு அழைப்பு விடுத்தும் இதுவரை அவர் சமூகமளிக்கவில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மோசடி இடம்பெற்றமை குறித்த விசாரணையை நிறைவு செய்ய மஹிந்த ஜயசிங்கவின் வாக்குமூலம் அவசியமானதென குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே நீதிமன்ற ஆணைப்படி அவரை வாக்குமூலம் அளிக்க அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.
(அத தெரண - தமிழ்)