செவ்வாய், 11 செப்டம்பர், 2012

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு தாலிபான்கள் கொலை மிரட்டல்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் மகனான இளவரசர் ஹாரி, முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் நேட்டோ படையின் தலைமையின் கீழ் உள்ள பிரிட்டன் படையில் இணைந்து பணியாற்றினார். பின்பு பாதுகாப்பு காரணங்களுக்காக 2008ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார். தற்போது மீண்டும் ஆப்கானில் உள்ள ஹெல்மண்ட் பகுதியில், நான்கு வருட காலங்களுக்கு பணியாற்ற பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
ஹெலிகாப்டர் ஓட்டுனராக பணியாற்றவுள்ள ஹாரிஸ் கண்காணித்தல், தடுத்து நிறுத்துதல், விமானங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தல் மேலும் தேவைப்படுமானால் தரைத்தளத்தில் இறங்கி போரிடுவது போன்ற ராணுவப்பணிகளை அங்கு மேற்கொள்ள உள்ளார். ஹாரிஸ் நிர்வாணமாக நிற்பது போன்ற படத்துடன் சமீபத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் கூறியதாவது:-
 
இங்கிலாந்து அரியணையில் ஏறும் வாய்ப்பை பெற்றுள்ள மூன்றாவது இளவரசர் ஹாரியை கொல்ல பெரிய அளவிலான திட்டம் தீட்டியிருக்கிறோம்.  கடந்த 10 வருடங்களாக அதிகம் சண்டையினை சந்தித்து வரும் ஹெல்மண்ட் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்ற உள்ள ஹாரியையும் மற்றும் பிரிட்டன் படையினரையும் கொல்ல எங்களால் முடிந்த வரை போராடுவோம். அவரை கடத்துவது முக்கியமல்ல. எங்கள் நாட்டில் எங்களுக்கு எதிராக போர் புரிபவர்கள் எங்களது எதிரிகளே. அவரை குறிவைத்து கொல்வதுதான் எங்கள் குறிக்கோள்.