தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடி பாதிரியார் டெஸ்மண்ட் டூட்டு .இன வெறிக்கு எதிராக போராடியதற்காக 1984-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். ஈராக் மீது போர் தொடுத்ததற்காக அவர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோரை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ஈராக்கில் மனித பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஜார்ஜ் புஷ்சும் , டோனிபிளேரும் பொய் கூறி ஈராக் மீது போர் தொடுத்து விட்டனர். இதற்கு முன்னர் சரித்திரத்தில் நடந்த மற்ற போர்களைவிட ஈராக் போர்தான் உலகை மிகவும் மோசமாக ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளியது.
சிரியாவில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு போர், மற்றும் ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டம் ஆகியவையும் கூட ஈராக் மீது அமெரிக்கா, இங்கிலாந்து போர் தொடுத்தது தான் காரணம். இந்த குற்றங்களை செய்த ஜார்ஜ் புஷ், டோனிபிளேர் இருவரையும் சர்வதேச கோர்ட்டு கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும். இரு தலைவர்களும் தாங்கள் அடாவடித்தனங்களை செய்வதற்காக பொய்யான காரணங்களை தாங்களே உருவாக்கி சொன்னார்கள். மக்கள் பிளவுபடவும் வழிசெய்துவிட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதிரியார் டெஸ்மண்ட்டூட்டுக்கு கொலை காரன் டோனி பிளேர் பதில் அளித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பொய் சொன்னோம் என்று கூறுகின்ற அந்த பழைய அடிப்படையில்லாத வாதம் தவறானது. இது குறித்து பல தடவைகள் விவாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது அது குறித்து புதிதாகக் கூறுவதற்கு எதுவும் கிடையாது அத்துடன் பிரச்சினைகள் பல இருக்கின்ற போதிலும், ஈராக் தற்போது 3 மடங்கு பெரிதான பொருளாதாரத்தை பெற்றிருப்பதுடன், அங்கு குழந்தைகளின் இறப்பு வீதமும் மூன்றில் ஒரு மடங்காக குறைந்திருக்கிறது. பஸ்ரா போன்ற இடங்களில் முதலீடுகள் பெரிதும் அதிகரித்திருக்கின்றன.