முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். யாழில் உள்ள நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
அத்தோடு யாழில் மணியம் தோட்டப் பகுதியிலுள்ள மீளக்குடியமர்ந்த மக்களைப் பார்வையிட்டுள்ளார்.
ஏ9 தரைப்பாதை வழியாக வந்த சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில் பல வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லவுள்ளதுடன் நாகவிகாரை, நாகதீபம் ஆகிய இடங்களுக்கு செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.
அத்தோடு யாழில் பல சமயத் தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
(அத தெரண - நிருபர்)