ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் வேண்டுகோளுக்கு அமைய, ஜனாதிபதியின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார் நேற்று முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்துக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளுக்கு அமையவும், இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் கபிலவஸ்து புனித தாதுவுக்கு கெளரவமளிக்கும் வகையிலும் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் மிருக வேள்வியை இவ்வருடம் தற்காலிகமாக நிறுத்துவதாக கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதன் பின்னர் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை நேரடியாகச் சென்று ஆராயுமாறு ஜனாதிபதியின் செயலாளர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஜனாதிபதியின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார், பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்று ஆலய நிர்வாக சபையினருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். ஜனாதிபதியின் வேண்டுகோள் மற்றும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் கபில வஸ்து புனித தாதுவுக்கு கெளரவமளிக்கும் வகையிலும் குறித்த வேள்விப் பூஜை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யாருடைய அச்சுறுத்தல் காரணமாகவும் இந்த மிருக பலியிடும் வேள்விபூஜை நிறுத்தப்படவில்லை. இப்பூஜை பிறிதொரு தினத்தில் நடைபெறும். அதற்கான திகதி பின்னர் ஆலய நிர்வாகத்தினால் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். அதேநேரம், இன்று நடைபெறவிருந்த பத்திரகாளி அம்மன்கோவில் வேள்விப் பூஜையில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழி கொண்டு வருபவர்கள் தடையின்றி கொண்டு வர முடியும்.
அவற்றை ஆலய நிர்வாகம் பொறுப் பேற்கும். ஆலயத்துக்கு கொண்டுவரப்படும் ஆடு, கோழிகளை எடுத்து வருபவர்களைத் தடை செய்ய வேண்டாமென பொலி ஸாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு ள்ளது. எந்தவித பதற்றமும் இல்லாமல் இன்று நடைபெறுகின்ற பூஜையை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் பொலிஸாரிடம் பாலரவிசங்கர சிவாச்சாரியார் வேண்டுகோள் விடுத்தார். இவருடன் மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி எம்.என்.எம். அசீம், மனித உரிமைகள் அமைப்பின் புத்தளம் மாவட்டப் பணிப்பாளர் எம்.பி.எம். சபீம், புத்தளம் மாவட்ட பணிப்பாளர் சுனில் பெர்னான்டோ, புத்தளம் மாவட்ட பணிப்பாளர் நஸ்ரின் மரிக்கார், அஜித் தபரோ ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.