பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருப்பதாக இரண்டு தரப்புகளும் தெரிவித்துள்ளன. பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களை விசேட சேவைப்பிரிவாக வகைப்படுத்தவும், இது தொடர்பில் விசேட குழுவொன்றை நியமிக்கவும் இணக்கம் தெரிவித்து அரசாங்கம் அமைச்சரவைத் தீர்மானமொன்றை எடுத்திருந்தது.
எனினும், இந்தத் தீர்மானம் தமக்குத் திருப்தியளிக்கவில்லையென்றும், தாம் முன்வைத்த கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லையெனத் தெரிவித்தும் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் நவரட்ண தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இப்பேச்சு வார்த்தைகளின் ஊடாக தீர்வொன்றைக் காண்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதேநேரம், தாம் முன்வைத்த கோரிக்கைகள் யாவும் அமைச்சரவைத் தீர்மானத்தில் உள்ளடக்கப்படாததால் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் கலாநிதி நிர்மல ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார். அரசாங்கத் தரப்பினருடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைளில் கலந்துகொள்ளவிரு ப்பதாகவும், இப்பேச்சுவார்த்தைகளின் ஊடாக உறுதியான தீர்வொன்று காணப்பட்டால் வேலைநிறுத்தப் போரா ட்டத்தைக் கைவிடுவது பற்றித் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.