புதன், 12 செப்டம்பர், 2012

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் இன்று இலங்கை வருகிறார்

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் இன்றைய தினம் (12) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்றுநாள் சற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை வருகிறார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ரொபர்ட் ஓ பிளேக் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

இதன்போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை அமுலாக்குமாறு தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை இலங்கை வர்த்தகர்கள் குழு ஒன்றையும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் சந்திக்கவுள்ளார்.