ஹட்டன் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பொழுது இவருக்கு உதவிய இரண்டு பாடசாலை மாணவர்கள் தொடர்பான தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
தற்போது இந்த இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் ஹட்டன் பகுதியில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 8இல் கல்வி கற்பவர்கள் எனவும் இவர்கள் 13 வயதுடையவர்கள் எனவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் வீட்டு பாவனை பொருட்கள், பணம் மற்றும் கடைகளில் இலத்திரனியல் பொருட்கள் திருடியது மட்டுமல்லாமல் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் திருடி அவற்றை பகுதியாக பிரித்து விற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்கள் திருடிய தொலைக்காட்சி பெட்டி மற்றும் பகுதியளவில் அகற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இரண்டு என்பவற்றையும் ஹட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களை ஹட்டன் நீதவானிடம் முன்னிலைப்படுத்தி தொடர்ந்து வைத்தருந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியைப்பெற்ற ஹட்டன் பொலிஸார் இவர்களிடம் தொர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.