வெள்ளி, 14 செப்டம்பர், 2012

இலங்கை வந்துள்ள ரொபர்ட் ஓ பிளேக்- அமைச்சர் நிமால் சிறிபால சந்திப்பு!

மூன்று நாள் உத்தியோகபூரவ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்- அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை நீர்பாசன அமைச்சில் வைத்து நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது- இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளாததன் காரணமாகவே அதன் பணிகள் தாமதமாகி வருவதாக அமைச்சர் சில்வா- அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பிரதிநிதிகளை இன்று நியமித்தால்- தெரிவுக்குழுவின் பணிகளை நாளை முதல் ஆரம்பிக்க முடிவும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர வடமாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகள்- மீள்குடியேற்றம் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷேசல் சீசனும் கலந்துக்கொண்டார்.(எம்.ரி.-977)