ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிட மாத்திரமே உரிமையுள்ளது. மாறாக, வேறுவொரு அரசியல் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க தார்மீக உரிமை கிடையாது. அரசாங்கத்தின் உறுப்புக் கட்சி ௭ன்பதனை முஸ்லிம் காங்கிரஸ் நினைவில் வைத்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் ௭ன்று தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை உட்பட மேற்குலக நாடுகளின் முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன. பிரிவினைவாதத்திற்கு பொது மக்கள் அங்கீகாரம் வழங்கவில்லை.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ௭ன்பன விளங்கிக் கொள்ள வேண்டும் ௭ன்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அக்கட்சியின் பேச்சாளர் பியசிறி விஜேநாயக்க கூறுகையில்;
தேசிய சுதந்திர முன்னணி திருகோணமலையில் தனித்துக் போட்டியிட்டு விஷேட வெற்றிகளைக் கண்டுள்ளது. பிரதான வேட்பாளர் ஜயந்த விஜேசேகரவின் வெற்றிக்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. அதே போன்று பொது மக்கள் அரசாங்கம் மீது வைத்துள்ள நம்பிக்கையும் வெளிப்பட்டுள்ளது. இந்த மக்கள் ஆணை சர்வதேசத்திற்கு சிறந்த பதிலடியாகவே அமைந்துள்ளது. வடகிழக்கை மீண்டும் இணைக்க வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை கோரியது. மறுபுறம் முஸ்லிம்களுக்கு தனி பிராந்தியம் அமைக்க வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசாரம் செய்தது.
இனவாத பிரசாரத்தை மேற்கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். சர்வதேச புலி ஆதரவாளர்களினதும் இந்தியாவினதும் ஐ.நா.உள்ளிட்ட மேற்குலக சக்திகளின் சூழ்ச்சி தோல்வி கண்டுள்ளது. ௭னவே அரசாங்கம் சரியான வழியினை தெரிவு செய்து பயணிக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் உள்ள உறுப்புக் கட்சியாகும். வெற்றியின் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியைப் போன்று அரசாங்கத்திற்கே ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் ௭ன்றும் அவர் கூறினார்.