உணவுக்கு ஒவ்வாத மீன் வகைகளை விற்பனை செய்த வியாபாரிகள் சிலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்ட உணவு மருந்து பரிசோதனை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபரத்தில் தற்போது அதிக வறட்சி நிலவுகிறது.
எனினும் சிலர் பொதி செய்தல் சட்டத்தை மீறி மீன் பொதி செய்து விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 11 மீன் வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட உணவு மருந்து பரிசோதனை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
(அத தெரண - தமிழ்)