சனி, 1 செப்டம்பர், 2012

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சிறுவன் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

கொட்டகலை ஸ்டோனிக்கிளிப் தோட்டப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய சிறுவன் ஒருவனை தோட்ட மக்கள் திம்புலை-பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சிறுவன் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவன் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் அற்ற நிலையில் தனது சகோதரனின் பராமரிப்பில் இருந்ததாகவும் தற்போது அங்கிருந்த வெளியேறியுள்ளதாகவும் அந்த சிறுவன் பொலிஸாரிடம் கூறியுள்ளான்.

இது தொடர்பாக திம்புல – பத்தனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.