ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையகத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க இலங்கை எப்போதும் முன்னிற்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவா கிளைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 21ம் அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவை வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிதி ஒதுக்கீடு, பதவி நியமனம் என்பவற்றில் அதிக வெளிப்படைத்தன்மை காணப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலின் மூலம் நாட்டின் ஜனநாயகம் மீண்டுமொரு முறை உலகிற்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.