சனி, 27 அக்டோபர், 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட 14 புகலிட கோரிக்கையாளர்கள் நாடு திரும்பினர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 14பேரும் இன்று மாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களில் சிலரை தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீன்பிடி படகை கடத்தியதாகவும் நடுகடலில் வைத்து சிலரை கொலை செய்துவிட்டு அவர்களின் படகை கடத்திச் சென்றதாகவும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களுக்கு எதிராக தங்காலை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்களை தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நாடு திரும்பிய இந்த 14பேரில் பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
(தீபா அதிகாரி)