சனி, 27 அக்டோபர், 2012

முல்லைத்தீவு, வெள்ள முள்ளிவாய்க் கால் கடற்கரைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு, வெள்ள முள்ளிவாய்க் கால் கடற்கரைப் பகுதியில் புதைத்து வைக் கப்பட்டிருந்த 450 கிலோக்கிராம் சி-4 ரக வெடி மருந்து மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ள தாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கை மூலம் கடந்த 2-ம் திகதி இந்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பகுதியிலிருந்து சி-4 வெடி மருந்து 450 கிலோகிராம், 80 மில்லிமீற்றர் குண்டுகள் 1120, ரீ-56 ரக துப்பாக்கி ரவைகள் 5925, கிளேமோர் குண்டுகள் 25 ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன. அதேபோன்று வெள்ள முள்ளி வாய்க்கால் பிறிதொரு பகுதியில் ரீ-56 ரக துப்பாக்கி 7, ஆர்.பீ.ஜீ ரவைகள் 11, ஆர்.பீ.ஜீ சாச்சர் 03, 12.7 ரவைகள் 122, 40 மில்லிமீற்றர் ரவை கள் 17 என்பன மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 24-ம் திகதி முள்ளிவாய்க்கால் கப் பல் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.