ஞாயிறு, 28 அக்டோபர், 2012

ஈராக் பக்ரீத் விழாவில் தீவிரவாதிகள் தாக்கியதில் 30 பேர் பலி

பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈராக்கில் நடந்த பக்ரீத் பண்டிகையின் போது தீவிரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள்.

பாக்தாத் அருகே உள்ள சதார் என்ற இடத்தில் ஷாயா முஸ்லீம்கள் பக்ரீத் விழாவுக்காக கூடியிருந்த இடத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

மொசூல் என்ற இடத்தில் மர்ம மனிதர்கள் 2 பேர் பக்ரீத் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் 9 பேர் பலியானார்கள். அதே பகுதியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புனித தலத்தை பார்வையிடுவதற்காக வந்தனர்.அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதிலும் பலர் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் பல இடங்களில் தாக்குதல் நடந்தன. அனைத்து தாக்குதலையும் சேர்ந்து 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.