புதன், 23 ஜனவரி, 2013

கடந்த டிசம்பரில் மட்டும் 122252 உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வருகை!

touristஇலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு உல்லாசப் பிரணாணிகள் வந்த மாதமாக கடந்த 2012 ஆம் வருடம் டிசம்பர் மாதம்  பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் செயற்பாட்டுக்குழு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 122,252 உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த உல்லாசப் பயணிகள் எண்ணிக்கை 1.005.605 ஆகும். 2011 ஆம் ஆண்டையூம் விட 2012 ஆம் ஆண்டில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை 17.5 வீத வளர்ச்சி கண்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பிரசார நடவடிக்கைகளின் பயனாகவே இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிரித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.