செவ்வாய், 22 ஜனவரி, 2013

மனைவி மிச்செலியின் புதிய முடி அலங்காரம் அருமை: அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம்.

மனைவி மிச்செலியின் புதிய முடி அலங்காரம் அருமை: அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம்
அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நேற்று 2-வது முறையாக பாராளு மன்றத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார். அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற ஒபாமாவின் மனைவி மிச்செலி மிகவும் ஸ்டைல் ஆக உடை அணிந்து இருந்தார்.

கழுத்தை இறுக்கமாக மூடிய நீல நிற கோட் அணிந்து இருந்தார். புதுவிதமான ஷு அணிந்திருந்தார். புதுவிதமான தலை முடி அலங்காரத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் பதவி ஏற்பு விழாவுக்கு முன் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஒபாமா பேசினார்.

அப்போது, அவர் தனது மனைவி மிச்செலி பற்றி குறிப்பிடுகையில், நான் என் மனைவி மிச்செலியை மிகவும் நேசிக்கிறேன். அவரது புதிய முடி அலங்காரம் அருமையாக உள்ளது. பொதுவாக பார்ப்பதற்கு அவர் அழகாக இருப்பார். தற்போது அதைவிட மிக அழகாக இருக்கிறார் என்றார். இதைக்கேட்டதும் கூட்டத்தினர் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.