ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் படம் விவகாரம் - தமிழக அரசு வழக்கறிஞருக்கு திரைப்பட தணிக்கை துறை கண்டனம்

விஸ்வரூபம் படம் விவகாரம் - தமிழக அரசு வழக்கறிஞருக்கு திரைப்பட தணிக்கை துறை கண்டனம்
கமல் ஹாசன் தயாரித்த விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம் மதத்திற்கு எதிராக இருக்கிறது என்று கூறி தமிழக அரசு தடை செய்தது. இதுகுறித்த வழக்கில் விஸ்வரூபம் திரைப்படத்தை தகுதியான அதிகாரிகள் தணிக்கை செய்யவில்லை.

இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய தணிக்கை துறையை தமிழ அரசு வழக்கறிஞர் நவநீதம் கிருஷ்ணன் முன்பு குறை கூறியிருந்தார்.

இதைக் கண்டித்து மத்தியத் திரைப்பட தணிக்கை துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கிய சட்ட விதிமுறைகளின்படி திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதனடிப்படையிலேயே விஸ்வரூபமும் மற்ற திரைப்படங்களும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது என்பதை உங்கள் முன் வைக்க மத்திய திரைப்பட தணிக்கை துறை விரும்புகிறது.

திரைப்படங்களுக்கு தணிக்கை செய்வதில் 1951-ம் ஆண்டிலிருந்து சட்டப்படி மத்தியத் திரைப்பட தணிக்கை துறை செயல்பட்டு வருகிறது. விஸ்வரூபம் பட விவகாரத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் நவநீதம் கிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை பொறுப்பற்றவை ஆகும்.

தணிக்கை துறை அதிகரிகளை விலைக்கு வாங்கி விடலாம் என்று  கூறிய அட்வகேட் சங்கரசுப்பு மற்றும் தமிழக அரசு வழக்கறிஞர் நவநீதம் கிருஷ்ணன் ஆகியோரை மத்திய திரைப்படத் தணிக்கை துறை கண்டிக்கிறது. எனவே இவர்களின் குற்றச்சாட்டை முற்றிலும் தவறானதாகவும் தணிக்கை துறையை அவமதிப்பதாகவும் இது கருதப்படும்.