செவ்வாய், 30 ஏப்ரல், 2013

சிரியா நாட்டின் எல்லையில் ரஷ்ய பயணிகள் விமானம் மீது ஏவுகணை தாக்குதல்

ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான தனியார் பயணிகள் விமானம் சுமார் 200 பயணிகளுடன் நேற்று எகிப்தில் இருந்து ரஷ்யா திரும்பிக் கொண்டிருந்தது. சிரியா நாட்டின் வான் எல்லைக்குள் அந்த விமானம் நுழைந்த போது, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த 2 ஏவுகணைகள் விமானத்தை தாக்க முற்பட்டன.

ஏவுகணைகள் விரட்டுவதை அறிந்துக் கொண்ட விமானி, லாவகமாக விமானத்தை பக்கவாட்டில் ஒதுக்கி செலுத்தினார். குறி தவறிய 2 ஏவுகணைகளும் விமானத்தின் மீது மோதாமல் கடந்து சென்றன. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்தனர்.

சிரியாவில் நடைபெற்று வரும் அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு ரஷ்ய அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், அதிபருக்கு எதிராக போராடி வரும் புரட்சியாளர்கள் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்லாம் என கருதப்படுகிறது.