செவ்வாய், 30 ஏப்ரல், 2013

யுத்தத்திற்கு பின்னரான இலங்கை மக்களின் சகோதரத்துவம் கண்டு அமெரிக்க தூதுவர் மகிழ்ச்சி

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் இலங்கையில் சகல மக்களும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதனை கண்டு மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல்.ஜே.சிசன் தெரிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ் என எந்த மொழிகளை பேசினாலும் அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ்வதாக மிச்செல் குறிப்பிட்டுள்ளார்.


மட்டக்களப்பு, புல்மலை பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக ஐந்து கோடி ரூபா செலவில் பொது வர்த்தக நிலையம் மற்றும் பஸ் தரிப்பிடம் அமைக்கும் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.