வியாழன், 19 செப்டம்பர், 2013

பிரான்ஸ் நாட்டில் சிறுமிகள் அழகி போட்டிக்கு தடை

உலக நாடுகளில் அழகி போட்டி என்பது போதுவாக நடைபெறும் விஷயமாகும். ஆனால் பிரான்ஸ் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மினி மிஸ் என்ற பெயரில் அழகிப் போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் குழந்தைகள் அழகான ஆடையுடன் மேடையில் தோன்றி பட்டத்தினை வென்று செல்வார்கள். இந்நிலையில், இந்தப் போட்டியானது குழந்தைகளை ஆபாச முறையில் காட்டப்படும் நிகழ்ச்சி என்று செனேட்டர் மையமானது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த போட்டியானது பிரான்ஸ் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதனை மேற்கொண்டு தொடர்ந்தால் 30,000 யூரோ அபராதமும், 2 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அனைத்து செனேட்டர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. மேலும் சோசலிச கட்சியானது இந்த தண்டனை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளது.