சனி, 27 பிப்ரவரி, 2016

12 வயது சிறுமியை திருமணம் செய்ய துடித்த 65 வயது வயோதிபர் : எதிர்ப்பு தெரிவித்த பொது மக்கள் (காணொளி)

நாள் ஒன்றுக்கு 33 ஆயிரம் சிறுவர்களுக்கு  திருமணம் நடக்கின்றது. அதாவது அவர்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கொள்ளையிடப் படுகின்றது.
 
இவ்வாறு இளம்வயது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சிறுவர் திருமணம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அண்மையில் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்கு தெரியாமல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

 அதாவது 65 வயது வயோதிபர் ஒருவர்   12 வயது சிறுமியை திருமணம் செய்யப்போவதாக சொல்லிக்கொண்டு திருமணக்கோலத்தில் நியூயோர்க் நகரில் மக்கள் செறிந்திருந்த பகுதியில் புகைப்படம்  எடுக்க முற்படுவதும், இதனை காணும் பொதுமக்கள் இதற்கு தெரிவிப்பதுமாக காணொளி பதிவாகியிருந்து.
 
 
 
அதாவது தொழிநுட்ப உலகில்  மக்களிடையே இன்னும் மனிதாபிமானம் உள்ளதா என்று ஆய்வை மையப்படுத்தியும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீங்களும்
 
பாருங்கள் அந்த காணொளியை