தேர்தலுக்காக
புதிய கோசங்களுடன் மக்களிடம் வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்
தொடர்பில் மக்கள்தான் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக்
கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப் பினருமான டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் தெரிவித்ள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் இன்றைய தினம் (19) நடைபெற்ற
ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்தகாலங்களில் அபிவிருத்தியையும் அரசியல் தீர்வையும் நாம் வலியுறுத்தி
அவற்றை செயற்படுத்தி வந்திருக்கின்றோம் என்பதுடன் சமகாலத்திலும் அதனையே
நடைமுறைப் படுத்தியும் வருகின்றோம்.
ஆனால் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த வேடத்தையும்
போடக் கூடியவர்கள் என்பதற்கு ஜனாதிபதி தேர்தலுக்கு சரத் பொன்சேகாவுக்கு
மக்களை வாக்களிக்க சொன்னதனூடாக புலப்படுகின்றது.
அதுமட்டுமன்றி தேர்தலுக்காக புதிய கோசங்களுடன் மக்களிடம் வரும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினர் தொடர்பில் எதிர்காலத்தில் மக்கள்தான் தெளிவாக
புரிந்துகொள்ள வேண்டும்.
இதனிடையே தற்போதைய அரசில் பங்கெடுப்பதற்கு நாம் விரும்பவில்லை. மாறாக
பார்வையாளராக வெளியிலிருந்து கொண்டு ஆதரிக்கவே விரும்புகின்றோம் என்று
தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எந்த தமிழ் அரசியல் தலைவர்களும்
செய்யாத மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நாமே செயற்படுத்தியுள்ளொம் என்றும்
சுட்டிக்காட்டினார்.
இதனிடையே சுன்னாகம் குடிநீர் விடயம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்ட அதேவேளை
இதில் அரசியல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன்
இப்பிரச் சினைக்கு தீர்வுகாண நாம் முயற்சித்த போது கூட்டமைப்பினர் ஒரு
நிலைப்பாட்டினையும் அதையே தாங்கள் எடுத்த போது வேறொரு நிலைப்பாட்டையும்
எடுத்ததனூடாக இந்த அரசியல் முறைகேடு தெளிவாகின்றது என்றும் தெரிவித்தார்.
இதில் ஊடகவியலாளர்களது கேள்விகளுக்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
பதிலளித்தார்.

