சனி, 20 பிப்ரவரி, 2016

மக்களின் கைகளுக்கு பணம் கிடைக்கும் வழிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்

மக்களின் கைகளுக்கு பணம் கிடைக்க கூடிய முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். 
 
அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
 
மக்களின் கைகளுக்கு பணம் கிடைக்காமல் இருப்பதற்கான பிரதான காரணம் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதாகும் என அவர் கூறினார்.

ஊடகங்களினூடாக எழும் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் அதனை அடக்க முனைவது நியாயமானதல்ல என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.