கிருஷ்ணா, சுவாதி இணைந்து நடித்துள்ள படம் ‘யாக்கை’. இப்படத்தை குழந்தை
வேலப்பன் இயக்கியிருக்கிறார். யுவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இவருடைய இசையில் உருவான ‘நீ...’ எனத் தொடங்கும் பாடல் காதலர் தினத்தை
முன்னிட்டு பிப்ரவரி 13ம் தேதி வெளியானது.
வெளியான வேகத்தில் ஐ டியூன் அட்டவணையில் உச்சம் தொட்டிருக்கும் இந்தப் பாடல், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் அட்டகாசமாக டிரென்ட் அடித்துக் கொண்டு இருக்கிறது. பாடல் வெளியாகி சில நாட்களிலேயே இந்தப் பாடல் பிரபலமாகி இருப்பதோடு, சமூக வலைதளங்களில் 'நீங்கள் திரையில் பார்க்க விரும்பும் பாடல் எது? என்ற வாக்கெடுப்பில் முதல் இடத்துக்கும் வந்திருக்கிறது.
மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் தன் டுவிட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை மேற்கோள் காட்டி ‘யுவன் இஸ் பேக்’ என்று ட்வீட் செய்துள்ளார்.
ஐ டியூன் தமிழ் அட்டவணையில் முதல் இடத்துக்கு வந்தது மட்டுமல்லாமல், யூடியூபில் ஒரு லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.