மக்களுக்கு பணத்தைக் கொடுத்து அவர்களை வீதியில் இறக்கி கூச்சலிட்டு காலத்தை வீணடிக்க வேண்டாம் என, தான் அனைத்து தரப்பிடமும் கேட்டுக் கொள்வதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் ஒன்றி ணைந்தது நாட்டுக்காகவே எனவும், நாட்டை கட்டி யெழுப்புவது தொடர்பில் நாம் செல்லும் பயணத்தை எவராலும் நிறுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மக்களை வீதியில் இறக்குபவர்களுக்கு கூறுகிறேன், எம்மால் உங்களைப் போல் பத்து மடங்கு பேரை வீதியில் இறக்க முடியும் மற்றும் ஊடகங்கள் இதற்காக காலத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
