அதிகநீர்த்தேவை இன்றி வளமற்ற மண்ணிலும் அதிக செலவின்றி அதிக வருமானத்தை பெற இப்போது உலக நாடுகள் மூங்கில் செய்கையில் நாட்டம் காட்டத்தொடங்கி உள்ளன.பாதுகாப்பான அபிவிருத்தி என்ற உலக பொதுக் கொள்கைக்கு உகந்த மற்றும் சாதாரணமாக எந்த பயிர்ச்செய்கைக்கும் பொருத்தமில்லாத நிலங்களில் இவ் மூங்கில் செய்கை மேட்கொள்ளப் படுவதால் எல்லா நிலங்களும் இனி வருமானம் தரும் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் பல மாவட்டங்களிலும் மாகாணங்களிலும் இந்த மூங்கில் செய்கையைஅந்த அந்த மாகான அரசுகளும் மக்களும் ஒரு வரப்பிரசாதமாக கருதி வரவேற்க வடமாகாணத்தில் மட்டும் இப்போது பிரச்சினை வழமை போல் தொடக்கி விட்டதுவவுனியாவில் கைவிடப்பட்ட தரிசு நிலங்களிலும் பயிர் செய்கைக்கு பொருத்தமில்லாத பற்றை படர்ந்த நிலங்களிலும் தொடர்ச்சியாக வருமானம் தரக்கூடிய மூங்கில் பயிர்ச் செய்கையை செய்வதனூடு எல்லா நிலங்களும் ஏதோ ஒரு வகையில் வருமானத்தை ஈட்டி தருவதாய் அமையும் என்பதுடன் எல்லோரும் தொடர்ச்சியாக வருமானம் பெற்றுகொள்ளவும் எதுவாய் அமையும் என மக்கள் உணர்ந்து ஆர்வம் காட்ட எமது வலிவடக்கு மக்களின் வலியில் வாழ்க்கை நடாத்தும் வடா மாகான விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் மட்டும் தன எதிர்ப்பை பதிவு செய்ததுடன் தான் வந்து நிலங்களை பார்த்து தான் அனுமதி தருவேன் எனவும் கூறியிருக்கிறார்.
ஆனால் இப்போது 2 மாதங்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை என்பது தான் உண்மை.இது தொடர்பாக வவுனியா பிரதேச மக்கள் கிராம சேவகர் தொடக்கம் முதலமைச்சர் ஆளுநர் என அனைவருடனும் கதைத்துள்ளனர்.யாவரும் அந்த திட்டத்தினை வரவேற்றாலும் எல்லோரும் ஐங்கரநேசனையே கை காட்டுகின்றனர். அப்படியிருக்க ஐங்கரநேசன் அவர்கள் காரணம் எதுவும் காட்டாமல் அனுமதி வழங்காது இழுத்தடிப்பது ஏன் ?
முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் முதலமைச்சர் என்ற ஒருவர் எதற்கு ?யுத்தம், இரத்தம், மரண சத்தம் என எதுவுமே தெரியாத ஒருவரை முதலமைச்சராக்கியதன் விளைவை மக்கள் இப்போது உணரத்தொடங்கி விட்டனர்.எமது நிலம் எமக்கு வேண்டும் என்று போராடிய கூட்டத்திற்கு இப்போது 25 வருடங்களுக்கும் மேலாக கிடைக்காத காணிகள் கிடைக்கும் நிலை அல்லது அதை பெற்றுகொடுக்கும் நிலை இந்த மூங்கில் பயிர் செய்கையின் ஊடாக கிடைத்துள்ளது.ஒரு பிரச்சினை தொடர்பாக எந்த ஒரு தகவல்களையும் பெறாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டு மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாத கதைகளை கதைப்பதென்பது எம் இனத்திற்கு ஒரு ஆரோக்கியமான போக்கை தராது .
இது தவிர இந்த திட்டத்தை இதுவரையில் பார்வையிடாத ஐங்கரநேசன் அவர்கள் தனது முகவர்களில் ஒரு முகவரை அனுப்பி இலஞ்சம் கேட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஊடகவியலாளர் என்ற பெயரில் வவுனியாவில் சுற்றித்திரியும் சிலரே ஐங்கரநேசனின் முகவர்களாக வவுனியா மாவட்டத்தில் செயற்படுவதாக வவுனியாவின் முக்கிய புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.வடமாகான முதலமைச்சர் அவர்கள் தன்னிடம் வரும் விவசாய அமைச்சு தொடர்பான பிரச்சினைகளை தலையிட்டு உடனே தீர்க்கவில்லை ஆயின் ஐங்கரநேசன் வாங்கும் லஞ்சத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு என மக்கள் தவறாய் உணர சந்தர்ப்பங்கள் அதிகமாய் இருக்கின்றன .
வடமாகாண முதலமைச்சரே ஆளுனரே அமைச்சர்களே புத்தியீவிகளே வடமாகாணத்தில் வரும் மக்கள் பொதுப்பிரச்சினைகள் இது வரையி காலக்கிரமத்தில் தீர்த்து வைக்கப்பட்டதா?தீர்வு என்பது குறித்த பிரச்சினைக்காக வைக்கப்படுகிறதா அல்லது வட மாகான அமைச்சர்களின் தனிப்பட்ட பிரச்சனைக்காக வைக்கப்படுகிறதா ?இது வரையில் நீங்கள் தீர்வென கொடுக்கப்பட்டவை மக்களை ஏமாற்றும் முயற்சியில்லையா ?உங்களுக்கு வரும் பிரச்சினைகளை குறிப்பாக மக்கள் தொடர்பான பிரதேசம் தொடர்பான பொதுப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வொன்றை கொடுக்க வேண்டும். மக்களை காக்க வைப்பதும் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல் செய்வதும் மக்களை பலவாறு சிந்திக்க வைக்கும்.

