தற்போது வடக்கு மாகாணத்தில் சமூக விரோதச் செயற்பாடுகள்
அதிகரித்துள்ளன. தமிழர்களது மாபெரும் பண்பாட்டை பாதுகாப்பதற்கு
அதிகாரத்தை தற்போது கொண்டுள்ள தமிழ்த் தலைமைகள் தவறிவிட்டன என்று
ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.
கடந்த (26) பாராளுமன்றத்தில் 23 இன் கீழ் (2) நிலையியற் கட்டளையின் கீழ் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில் -
வடமாகாணத்தில் அண்மைக்காலமாக சமூக விரோதச் செயற்பாடுகள், கலாசார பிறழ்வுகள், குற்றங்கள் என்பன அதிகரித்த நிலை காணப்படுகின்றது இவ்வாறு திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சமூக விரோதச் செயற்பாடுகளால் அதற்கு எதிராக போராடவேண்டிய நிலைக்குள் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். தற்போது வரையில் அவ்வாறான சமூக விரோத செயற்பாடுகள் தொடர்பாக எவரும் தண்டிக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது.

தமிழர்கள் மாபெரும் பண்பாட்டைக்
கொண்டவர்கள். அந்தப் பண்பாட்டை பாதுகாப்பதற்கு தற்போது அதிகாரத்தைக்
கொண்டுள்ள தமிழ்த் தலைமைகள் ஆற்றலின்மையால் தவறியுள்ளனர்.
வடமாகாணத்தில் தற்போது போதைப்பொருள் பாவனைகள், ஆபாச திரைப்படங்கள்,
சில தொழிநுட்பவசதிகள் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளன. இதன்
காரணமாக சமூகத்தில் பல்வேறு குரூரமான செயல்கள் இடம்பெறுகின்றன.
எவ்வாறாயினும் இவை இரண்டாம் தரமான காரணிகளாக காணப்படுகின்றபோதும்
அவை தாராளமானதாக அங்கு காணப்படுகின்றன என்பதே உண்மைநிலையாகும்.
அவ்வாறிருக்கையில் சமகாலமாக பெண்களின் பாதுகாப்பு
கேள்விக்குள்ளாக் கப்பட்டுள்ளது. விசேடமாக சிறுவயதுடைய வித்தியா,
ஹரிஸ்ணவி போன்ற பாடசாலை மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு
உள்ளாக்கப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள்
தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலையே தற்போது வரையில்
நீடிக்கின்றது.
அவ்வாறான நிலைமைகள் தொடர்வதால் குற்றவாளிகள்
தப்பிச் செல்வதற்கான சூழ்ச்சிகள் நடைபெறுகின்றனவா என்ற
சந்தேகமும் எழுகின்றது. பொதுமக்கள் பாதுகாப்புக்கு குழுக்கள்,
இயக்கங்களின் செயற்பாடுகள் அவசியமாவதோடு வடக்கில் இராணுவம் நிலை
கொண்டிருக்கின்ற போதும் வடக்கு அமைதிப் பூங்காவாகவில்லை. அங்கு குற்றச்
செயல்கள், குடும்ப வன்முறைகள், கலாசார பிறழ்வுகள் அதிகரித்தே
காணப்படுகின்றனஇவை முழுமையாக கட்டுப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றார்.