ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் நிறைவேற்றிய
தீர்மானத்திற்கிணங்க இலங்கையில் நடை பெற்ற போர்குற்றம் மற்றும் மனித உரிமை
மீறல்கள் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்க
மாட்டேன் என இலங்கை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடற்கரை நகரமான வடுவாவில் நடைபெற்ற தேசிய சட்ட கருத்தரங்கில் பேசிய சிறிசேனா, இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் இதர விசாரணைகளின்போது வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற நான் அனுமதிக்க மாட்டேன்.
உள்நாட்டு நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நிர்வாகிகள்மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. எனவே, நமது நாட்டில் நடைபெறும் விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளுக்கு அவசியமில்லை என்று கூறியுள்ளார்.