முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமயிலான அரசாங்கத்துடன் தாம் பேணி வந்த உறவுகள் குறித்த விமர்சனங்களை நிராகரிப்பதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பதவி விலகிச் செல்லும் பொதுச் செயலாளர் கமலேஸ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
மஹிந்தராஜபக்ஸ அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் விவகாரங்களை சர்மா கண்டு கொள்வதில்லை என மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன இந்த நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரித்துள்ளார்.
அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து அதன் கொள்கைகள் கோட்பாடுகளை மேம்படுத்துவதே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நோக்கமாகும் என கமலேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
நான் ஐந்து தடவைகள் இலங்கைக்கு விஜயம்செய்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா பதவியை விட்டு ஓய்வு பெற்றுக் கொள்ளும் நிலையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

