வியாழன், 3 மார்ச், 2016

காலஞ்சென்ற அமரர் செங்கையாழியானுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி

காலஞ்சென்ற அமரர் சாகித்திய ரத்னா கலாநிதி கந்தையா குணராசாவின் (செங்கை ஆழியான்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தியும் மலர்மாலை அணிவித்தும் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
 
நீராவியடி யாழ்ப்பாணத்திலுள்ள அன்னாரது இல்லத்திற்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
 
யாழ்ப்பாணம் கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் பிறவுண் வீதி நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா குணராசா கடந்த 28ஆம் திகதி தனது 75ஆவது வயதில் காலமானார்.
 
அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன.
அமரர் கலாநிதி கந்தையா குணராசா (செங்கை ஆழியான்)  டக்ளஸ் தேவானந்தாவின் நீண்டகால நண்பர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
 
காலஞ்சென்ற சாகித்திய ரத்னா கலாநிதி கந்தையா குணராசாவின் (செங்கை ஆழியான்) இழப்புத் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அனுதாபச் செய்தியில் 2010ம் ஆண்டு யாழ்ப்பாண எழுத்தாளர்களின் நூல்களை வெளிக்கொணரும் வகையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலும் தான் அமைத்திருந்த குழுவுக்கு செங்கை ஆழியான் அவர்கள் தலைமை யேற்றிருந்ததாகவும் இதற்காக பெருமளவு நிதியினை வழங்கியிருந்த தாகவும் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.