நடைமுறைச் சாத்தியமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் எம்மீது அரசியல் ரீதியிலான அச்சம் கொண்டே ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்குச் சார்பான ஊடகங்களும் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, எம்மீது சேறு பூசி வருகின்றனர். இவ்வாறான குற்றச் சாட்டுகளில் ஒரு துளியும் உண்மை கிடையாது என்பதை காலம் நிரூபித்து வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வடக்கிற்கான தென்பகுதியின் எவ்விதத் தொடர்புகளும் அறவே அற்றுப் போயிருந்த காலத்தில் யாழ் மண்ணில் அம் மக்களுடன் வாழ்ந்தவாறே அம்மக்களின் உயிர் காக்க உழைத்துப் போராடியவர்கள் நாங்கள். அங்கிருந்தவாறே ஜனநாயக சூழலை நாங்களே படிப்படியாகக் கட்டி எழுப்பியிருந்தோம்.

அன்றைய காலகட்டத்தில் அப்பக்கம் தலைவைத்தே படுத்திராதவர்கள், இன்று அங்கு வந்து அம்மக்களின் வாக்குகளில் தங்கி, அம்மக்களை ஏமாற்றி, சுயலாப அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களால் தூக்கி எறியப்பட்டவர்கள் சுயமாக இயங்குவதற்கு தகுதியற்று, இன்று கூட்டணி அமைத்துக்கொண்டு பச்சோந்திகளாக அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
தங்களதும், தங்களது குடும்பங்களினதும் சுய தேவைகளுக்காக மாறி, மாறி வரும் அரசுகளிடம் சலுகைப் பெற்று, மக்களுக்காக எதையுமே செய்யாமல் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறானவர்கள்தான் தங்களது சுய அரசியல் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக எம்மீது அவதூறுகளை சுமத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டபோது, அதன் பழி உடனடியாக எம்மீதே சுமத்தப்பட்டது. கருத்துகளுக்கு கருத்துகளால் அன்றி ஆயூதங்களால் முகங்கொடுக்கும் செயற்பாடுகள் எம்மிடம் ஒருபோதும் கிடையாது என்பதை நாங்கள் ஆரம்பம் தொட்டே தெளிவுபடுத்தி வந்துள்ளோம். இன்று சுமார் 8 வருடங்கள் கழிந்த நிலையில் அமரர் நடராஜா ரவிராஜ் அவர்களின் கொலை தொடர்பில் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலையுடன் தொடர்பான நபர் சட்டத்தின் முன் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு, அதன் பின்னணி கண்டறியப்பட்டதன் பின்பும்கூட ஒரு சிலர் தங்களது சுயலாப அரசியல் மற்றும் வியாபார நடவடிக்கைகள் காரணமாக எம்மீதே குற்றஞ் சாட்டினர். இதில் எந்தவித உண்மையூம் இல்லை. இவ்வாறு குற்றஞ் சாட்டுபவர்கள் இவ்விடயம் பற்றி இப்போதுகூட தாராளமாக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.