வெள்ளி, 7 டிசம்பர், 2018

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்​கு பெப்ரவரி வரை ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்​கை​ கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத் துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இது தொடர்பான வழக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலேனை கேட்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை கிடைக்கவில்லை என்று விசாரணைகளை மேற்கொள்ளும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சட்ட மா அதிபருக்கு நினைவூட்டல் அறிவிப்பு ஒன்றை விடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

பின்னர் வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரை ஒத்தி வைக்க நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.

விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.