ஜனநாயகத் தேசியக் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவகே ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தலா 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
