செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஆலய உற்சவங்கள் பெருமளவானோர் வருகை

யாழ். குடாநாட்டில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வருடாந்த உற்சவம் ஆரம்பமானதைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பெருந்தொகையான தமிழர்கள் இங்கு வருகை தந்துள்ளனர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவில், நல்லூர் கந்தசுவாமி கோவில், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் ஆகிய பிரசித்தி பெற்ற ஆலயங்களிலும், ஏனைய பல ஆலயங்களிலும் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

இத்திருவிழாக்களைக் கண்டுகளித்து சுவாமி தரிசனம் பெறுவதற்காக வெளிநாடு களில் வாழும் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் யாழ். குடாநாட்டிலுள்ள தமது உறவினர் வீடுகளில் வந்து தங்கியுள்ளனர்.