இலங்கையில் இருந்து சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்றுள்ள 490 பேர் தொடர்பான தகவல்களை இலங்கையுடன் பரிமாறிக்கொள்ள வேண்டும் என இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரா இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை இந்த 490 பேருக்கும் அகதி அந்தஸ்தை வழங்கக்கூடாது என இலங்கை அரசாங்கம் கனடாவிடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரா கனேடிய உயர் அதிகாரிகளுடன் உத்தியோக பற்றற்ற முறையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட போதே இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
