நேற்று பதுளை மடுல்சிம கோவில் தேர்த் திருவிழா உற்சவத்தின் போது வழங்கப்பட்ட அன்னதானத்தை உண்டு 10 வயதற்கும் குறைந்த 15 சிறுவர்கள் வயிற்றோட்டம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கடுமையான நிலையில் மட்டிகஹா தென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 1 1/2 வயது சிறுமியான ராமசாமி வேதநாயகம் சஹானா சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் மரண பரிசோதனையில் வயிற்றோட்டம் காரணமாக உடலில் இருந்த நீர் அனைத்தும் வெளியேறி இருதயம் பாதிக்கப்பட்டு அவர் இறந்துள்ளதாகவும் மடுல்சிம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பத்தில் பாதிக்கப்பட்ட கவலைக்கிடமான மூன்று சிறுவர்கள் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மடுல்சிம பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
