திங்கள், 16 ஆகஸ்ட், 2010

லக்ஷ்பானா கெனியன் வான்கதவுகள் திறப்பு

லக்ஷ்பான மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வதைத் தவிர்ப்பதற்காக அவற்றின் வான்கதவுகள் நேற்று திறந்துவிடப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். லக்ஷ்பான நீர்த்தேக்கத்தின் மூன்றுவான் கதவுகள் ஒரு அடி வீதமும், கெனியன் நீருத்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஆறு அங்குலப்படியும் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

லக்ஷ்பான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நேற்று காலை 10.00 மணியளவிலும் கெனியன் நீர்த்தேக்க வான் கதவுகள் முற்பகல் 10.50 மணியளவிலும் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.