சவூதி அரேபியா முகாம்களில் தங்கியுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் சிலர் இன்று நாடு திரும்பவுள்ளனர். இவ்வாறு 100 பேர் இன்று நாடு திரும்பவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட குழுவினர் சவூதி அரேபியாவில் உள்ள அகதிகளை சென்று பார்வையிட்டிருந்தனர். இதனையடுத்தே இவர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர்.
