சீன அரசாங்கத்தின் உதவியுடன் கண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியினை புனரமைப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீன அரசாங்கத்தின் 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனைப் மேற்பார்வை செய்வதற்கென மூன்று காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியினை புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான 81 மைல் தூரம் இதன்மூலம் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
