கட்சியின் நிலைபாட்டில் உள்ளபோதும் மக்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுடை கோரிக்கையை நிறைவேற்ற தான் பின்வாங்கப் போவதில்லையென ஐக்கிய தேசிய கட்சியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதில் கட்சியின் உயர்மட்டக் குழு எடுத்த முடிவிலேயே தான் தொடர்ந்தும் உள்ளதாக அவர் குறிப்பிடுள்ளார்.
கடந்த தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாமென கட்சியின் தலைவர் மக்களிடம் அறிவித்திருந்த போதும் அதனை மறுத்து தனக்கு வாக்களித்த மக்கள் தன்னை மாறக் கோரினால் நிச்சயமாக மாறுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.
