யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் பிரச்சினைப்டத் தேவையில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
டெங்கு ஒழிப்பிற்கு சிரமதானத்திற்கு சமூகமளிக்காத சமுர்த்தி சேவையாளர் மரத்தில் கட்டப்பட்ட சம்பவம் குறித்து ஊடகவியலாளர் இதன்போது கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், சமுர்த்தி உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அவரை மரத்தில் கட்டியதாக கூறினார்.
எனினும் மரத்தில் கட்டப்பட்டவரை உடனடியாக விடுவிக்குமாறு தான் கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். அதன் காரணமாகவே குறித்த உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சுப் பதவிகள் இல்லாமல் போனால் அதனையிட்டு தான் ஒருபோதும் கவலையடையப் போவதில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்தர். அவருடைய தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான பெஹலியகொட நகரசபை தலைவர் ஆனந்த முனசிங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
