பஸ் கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் நீதிமன்றம் செல்லவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பஸ் கட்டணம் 2.53 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நேற்று தீர்மானித்தது.
எனினும் பஸ் கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.
