இலங்கையில் வருடாந்தம் 15 ஆயிரம் புதிய புற்று நோயாளி கள் இனங் காணப்ப டுகிறார்கள். இவர்களில் 1000 பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிப்பிற்குள் ளாகியுள்ளனர். இவர்களில் 500 பேர் மரணிக்கிறார்கள். வருடாந்தம் 25சதவீதமான பெண்கள் மார்பக புற்றுநோயினால் பாதிப்பிற்குள்ளாகி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 30சதவீதமானோரின் நோய்த் தன்மை காலதாமதமாகி கண்டு பிடிக்கப்பட்டதனால் மரணமடைவதாகவும் அறிவிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயினால் பாதிப்புக்குள்ளாகி இருப்பது ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் 33 சதவீதமானோரின் நோய்களை குணப்படுத்த முடியுமென்று சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க காவி GAVI என்ற அமைப்புடன் இரு வகை கர்ப்பப்பை புற்றுநோயை தவிர்ப்பதற்கான ஊசி மருந்துகளை வாங்குவதற்கு உதவி பெறுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். காவி GAVI அமைப்பு ஏற்கனவே இலங்கையின் தேசிய நோய்த் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்திற்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
35 முதல் 55 வயதிற்குட்பட்ட பெரும்பாலான பெண்களே கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் மூன்று வருடங்களுக்கு ஒரு தடவையாவது பெப்ஸ் ஸ்மியர் பரிசோதனையை செய்வது அவசியமென்றும் அதன் மூலம் ஆரம்பக் கட்டத்திலேயே கர்ப்பப்பை புற்றுநோயை கண்டுபிடிக்கலாமென்றும் அறிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள சகல பிரதான ஆஸ்பத்திரிகளிலும் இந்த ஆய்வு இலவசமாக செய்யப்படுகின்றது.
