வியாழன், 4 ஆகஸ்ட், 2011

இலங்கையைவிட பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல் அதிகம்

தற்போது இலங்கையைவிட பிரித்தானியாவுக்கு எதிரான தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதாக பிரித்தானிய மப்பிள்குரொப்ட் பகுப்பாய்வாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

வட அயர்லாந்தில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதாலேயே பிரித்தானியா; அமெரிக்கா, பிரான்ஸ் இஸ்பைன், சீனா மற்றும் இலங்கையிலும் பார்க்க இந்த அச்சுறுத்தல் அறிக்கையில் முன்னிடத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கையில் 2010ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரையில் தீவிரவாத தாக்குதல் 15% அதிகரித்துள்ளதாகவும் உயிரிழப்புகள் 7% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பிரிட்டன் 38ம் இடத்திலும், இஸ்பைன் 53ம் இடத்திலும் அமெரிக்கா 61வது இடத்திலும் உள்ளன. கடந்த வருடம் பிரிட்டன் 47வது இடத்திலும் அமெரிக்கா 33ம் இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.