250 பொதுமக்களை கொலைசெய்த குற்றத்திற்காக முன்னாள் இராணுவ அதிகாரிகள் 4 பேருக்கு தலா 6000 ஆண்டுகள் வீதம் கொதமாலே நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கொதமாலேவில் கடந்த 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு போர் 1996 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதன் போது 1982 ஆம் ஆண்டு வடக்கு கொதமாலே கிராமமான டொஸ் எரஸ்ஸிற்குள் புகுந்த இராணுவம் சுமார் 201 பொதுமக்களை சுட்டுக்கொன்றது.
இந்த குற்றச்சாட்டின் பேரிலேயே மேற்படி 4 இராணுவ அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
